PBTSELANGOR

சட்ட விரோதமாக குப்பை கொட்டும் இடங்களை செலாயாங் நகராண்மைக் கழகம் அடையாளம் கண்டது

செலாயாங், அக் 29- சட்டவிரோதமாக குப்பை கொட்டும் 22 இடங்களை செலாயாங் நகராண்மைக் கழகம் இவ்வாண்டில் அடையாளம் கண்டுள்ளது.

சட்டத்திற்கு புறம்பான இச்செயலைப் புரிந்த  குத்தகையாளர்கள் மற்றும் தனி நபர்களுக்கு  57 குற்றப் பதிவுகள் இக்காலக்கட்டத்தில் வெளியிடப்பட்டதாக நகராண்மைக் கழகத் தலைவர் சம்சுல் ஷாரில் பட்லிஷா முகமது நோர் கூறினார்.

அந்த குற்றப் பதிவுகளில் 13 ரவாங்கிலும் கோம்பாக் மற்றும் கெப்போங்கில் தலா நான்கும் செலாயாங்கில் ஒன்றும் வழங்கப்பட்டதாக அவர் சொன்னார். குப்பைகளை சேகரிப்பது, அகற்றுவது மற்றும் அழிப்பது தொடர்பான  செலாயாங் நகராண்மைக் கழகத்தின் 2007 ஆம் ஆண்டு துணைச் சட்டத்தின் 4வது பிரிவின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :