குவாங் ஆற்றில் நீர் மாசுபாடு- துரித நடவடிக்கையால் நீர் விநியோக பாதிப்பு தடுக்கப்பட்டது

ஷா ஆலம், 1– அமலாக்க அதிகாரிகளின் துரித நடவடிக்கை காரணமாக ரவாங்கிலுள்ள குவாங் ஆற்றில் துர்நாற்றத்துடன்கூடிய மாசுபாடு ஏற்படுவது தடுக்கப்பட்டது. இப்பகுதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் பிளாஸ்டிக் பொருள்கள் எரிக்கப்பட்டதன் விளைவாக இந்த மாசுபாடு ஏற்பட்டது.

மாசடைந்த அந்த நீரிலிருந்து துர்நாற்றத்தை தணிக்கவும் அந்த ஆற்று நீர் சுங்கை செம்பா வழியாக சுங்கை சிலாங்கூரில் கலப்பதை தடுக்கவும் 43 மூட்டை கார்பன் எனப்படும் கரித்தூள் ஆற்றில் கொட்டப்பட்டது.

எரியூட்டப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் ஆற்றில் கலப்பதை தடுப்பதற்காக மண் தடுப்பை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுவாக சுற்றுச்சூழல் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சீயான் கூறினார்.

நீர் மாசுபடுவதற்கு காரணமாக இருந்த காரணத்திற்காக சம்பந்தப்பட்டத் தொழிற்சாலைக்கு 1999ஆம் ஆண்டு லுவாஸ் சட்டத்தின் 122வது பிரிவின் கீழ் நோட்டிஸ் வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :