ECONOMYSELANGORYB ACTIVITIES

சிலாங்கூர் அரசின் ஏற்பாட்டில் தையல் இயந்திரங்கள் அன்பளிப்பு- தனித்து வாழும் தாய் நெகிழ்ச்சி

ஷா ஆலம், நவ 20 – சுமார் 7,000 வெள்ளி மதிப்பிலான தையல் இயந்திரங்களை சிலாங்கூர் மாநில அரசு வழங்கியதைக் கண்டு தனித்து வாழும் தாய் ஒருவர் மனம் நெகிழ்ந்து போனார்.

சித்தம் எனப்படும் இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு  திட்டத்தின் கீழ் மூன்று தையல் இயந்திரங்களும் ஒரு அயன் பெட்டியும்  ஜூலியானா பிரான்சிஸ் (வயது 55) என்ற அம்மாதுவுக்கு வழங்கப்பட்டன.

தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் ஷா ஆலம், செக்சன் 20, பி.கே.என்.எஸ். குடியிருப்பில் உள்ள அம்மாதுவின் வீட்டிற்கு நேரில் சென்று அந்த வர்த்தக தளவாடங்களை  ஒப்படைத்தார்.

இந்த உதவி தமக்கு மனநெகிழ்வைத் தருவதாக ஜூலியானா கூறினார்.  வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதற்கு இந்த தையல் இயந்திரங்கள் தமக்கு பெரிதும் உதவும் என்றும் அவர் சொன்னார்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் தன் கணவர் இறந்த து முதல் தாம் தையல் தொழிலை கவனித்து வருவதாக ஜூலியானா தெரிவித்தார்.

புதிதாக தமக்கு தையல் இயந்திரங்கள் கிடைத்த தன் வழி மேலும் அதிகமானவர்களை வேலைக்கு அமர்த்தவும் புதிய ஆடர்களைப் பெறவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சித்தம் திட்டத்தின் முதல் கட்டமாக சிலாங்கூர் அரசு வர்த்தக தளவாடங்களை வாங்குவதற்கான 175 விண்ணப்பங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த கடந்த 13ஆம் தேதி அறிவித்திருந்தார். 

இந்நோக்கத்திற்காக 5 லட்சத்து 77 ஆயிரத்து 991 வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஒவ்வொருவருக்கும் பத்தாயிரம் வெள்ளி வரையிலான  வர்த்தக தளவாடப் பொருள்கள் வழங்கப்படும்.


Pengarang :