NATIONALYB ACTIVITIES

ஆலய உடைப்பு விவகாரத்தில் கெடா மந்திரி புசாரின் பொறுப்பற்ற பேச்சு- பக்கத்தான் ஹராப்பான் இளைஞர் பிரிவுத் தலைவர் நிக் நஸ்மி கண்டனம்

ஷா ஆலம், டிச 6-  கோல கெடா, தாமான் பெர்சத்துவில் உள்ள ஸ்ரீ ராஜ முனீஸ்வரர் ஆலயம் உடைக்கப்பட்ட விவகாரம் குறித்து பொறுப்பற்ற முறையில் கெடா மந்திரி புசார் முகமது சனுசி முகமது நோர் வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு பக்கத்தான் ஹராப்பான் இளைஞர் பிரிவுத் தலைவர் நிக் நஸ்மி நிக் அகமது கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆலய உடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மஇகா மற்றும் ஜசெக தலைவர்களை குற்ற
உணர்வு சிறிதுமின்றி ‘கள் குடிப்பவர்களுடன்’ ஒப்பிட்டு பேசிய முகமது சனுசியின் செயல் இஸ்லாமிய அரசியலுக்காக போராடும் அவரின் தோற்றத்தை பிரதிபலிப்பதாக இல்லை என்று அவர் கூறினார்.

அந்த ஆலயத்தை உடைக்கும் விவகாரத்தில் அவசரம் காட்டாமல் ஆலய பிரதிநிதி
களுடன் பேச்சு நடத்தியிருக்கலாம் என்பது தமது கருத்தாகும் என்று செத்தியா வங்சா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

நாட்டில் அனைத்து விதமான வழிபாட்டுத் தலங்களையும் கட்டுவதற்கு அனுமதி தேவை என்பதை கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். முனீஸ்வரர் ஆலயம் உடைக்கப்
பட்ட விவகாரத்திலும் இதுவே மந்திரி புசாரின் முக்கிய வாதமாகவும் உள்ளது. எனினும், பேச்சு வார்த்தையின் மூலம் இப்பிரச்னைக்கு சுமூகமான தீர்வு கண்டிருக்கலாம் என்றார் அவர்.

வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விவகாரங்கள் மிகவும் உணர்ச்சிகரமானவை
என்பதோடு இன பிரச்னைகளுக்கும் இது வழி வகுக்கும்.  ஆலயத்தை உடைப்பதால்
இந்துக்களுக்கு ஏற்படும் உணர்வு ரீதியான விளைவுகளை மந்திரி புசார் அறிந்திருக்க வேண்டும்  என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :