மோரிப்- ஹஸ்னுல் கிறிஸ்துமஸ் அன்பளிப்பு

ஷா ஆலம், டிச 14:  சிலாங்கூர் மோரிப் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்   மாண்புமிகு  ஹஸ்னுல்  பஹாருடின்  அவர்கள், தன் தொகுதியைச் சார்ந்த  60 ஏழைகள் மற்றும்  குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களும்   கிறிஸ்துமஸ்  பெருநாளைக் கொண்டாட  உணவு பொருட்களை அன்பளிப்பாக  வழங்கி அவர்களுக்கு வாழ்த்து  கூறினார்.

அந்நிகழ்வில்  பேசிய அவர்,  நம் நாட்டு கலாச்சாரம் என்பது  எல்லா இன  மக்களும் எல்லாப் பெருநாள்களையும் இணைந்து  கொண்டாடுவதாகும். இம்மாதிரியான வேளைகளில் நாம்  ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை மட்டும் கூறி  அன்பை  வெளிப்படுத்துவதாக இல்லாமல் , திறந்த இல்லங்களையும் நடத்தி மகிழ்வதுண்டு.

ஆனால், இவ்வருடம்  சற்று மாறுபட்டதாக உள்ளது , குறிப்பாக ஏழை மக்களின்  அன்றாட வாழ்வே  போராட்டமாக இருக்கிறது. ”ஒற்றுமையுடன் மோரிப் ”என்ற கோட்பாட்டுக்கு ஏற்ப  இவ்வேளைகளில்  நமது ஒற்றுமையைக் காட்டும் வண்ணம் இருப்போர், இல்லாதவர்களுக்கு  உதவுவதை  நாம் அனைவரும்  நமது வாழ்க்கை  நடைமுறையாகக்  கொள்ள வேண்டும் என்று அவரின் முக நூலில்  குறிப்பிட்டு உள்ளதற்கு ஏற்பச் சில  அமைப்புகள் அங்குள்ள ஏழைகளுக்கு உதவவும் , அவர்களுடன்  கிறிஸ்துமஸ்கான  ஏற்பாடு   செய்யவும், பெத்தேல் எவாஞ்சலிகல் சர்ச் மலேசியா பாண்டிங் பிரதிநிதிகளும், சுற்றுவட்டார அமைப்புகளும் முன் வந்தன.


Pengarang :