கிறிஸ்துமஸ் பண்டிகையை வசதி குறைந்தவர்களும் கொண்டாட RM240,000 ஒதுக்கப்பட்டுள்ளது

ஷா ஆலாம், டிச 21: கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடக் கூடிய வசதி குறைந்த கிறிஸ்தவர்களுக்கு உதவ மொத்தம் RM240,000 ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்குத் தேவையானவைகளை 2,000 க்கும் மேற்பட்ட வருமானம் குறைந்தர்களும் பெற இந்தத் தொகை உதவியாக இருக்கும் என நம்புவதாகக் கூறினார் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி.

இன்று இங்கு நடைபெற்ற ஒரு நிகழ்வில் இந்தத் தொகை மூன்று கிறித்துவ அமைப்புகளிடம் தலா 80 ஆயிரம் ரிங்கிட் வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டது. அதனை அவர்கள் முறையே 2000 வருமானம் குறைந்த வர்களுக்கு பகிர்ந்தளிப்பார்கள் என்றார் அவர்.

சிலாங்கூர் மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் எல்லாச் சமயங்களைச் சார்ந்த வருமானம் குறைந்தவர்களுக்கும் உதவும் வண்ணம் பல்வேறு விதமான உதவிகளை வழங்கி வருகிறது. அதனை ஒரு கலாச்சாரமாக மாநில அரசு கொண்டுள்ளது என்றார் அவர்.

சமீபத்தில் வசதி குறைந்த இந்துக்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாட அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்க ஜூம் சோப்பிங் பற்று சீட்டுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
அதைப் போன்று எல்லாச் சமயத்தினரும் அவர்களின் பண்டிகைகளைத் தொடர்ந்து கொண்டாட மாநில அரசு உதவும் என்றார்.


Pengarang :