NATIONALSELANGOR

கவனம் தேவை ! குடிமக்கள் மத்தியில் கோவிட் -19  எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது

ஷா ஆலம், டிச 23: டிசம்பர் 22 ஆம் தேதி நிலவரப்படி சிலாங்கூரில் 1014  கோவிட்19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.  கிள்ளான்  மொத்தம் 713  கோவிட்19 நோய்த் தொற்று சம்பவங்களுடன் , மிக உயர்ந்த புதிய  நோய்த் தொற்று மாவட்டமாக உருவெடுத்துள்ளது.அதன்  துணை மாவட்டமான காப்பார்  மொத்தத்தில் 358 கோவிட்19 நோய்த் தொற்று சம்பவங்களும்,  மீதமுள்ளவை கிள்ளான் துணை மாவட்டத்திலும் கண்டறியப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை (ஜே.கே.என்.எஸ்) தெரிவித்துள்ளது.

119 கோவிட்19 நோய்த்தொற்றுகளுடன் கோம்பக் இரண்டாவது இடத்தில் உள்ளது, இதில் பத்து (19 ) நோய்த் தொற்றுகள், உலுகிளாங்,  ரவாங்,  (9), ஸ்தாபாக்  (4) மற்றும் குவாங் (ஒன்று).

உலு லங்காட்டில் மொத்தம் 85 நோய்த் தொற்றுகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 34 நோய்த் தொற்றுகள் செராஸ், காஜாங்  (28), அம்பாங் (10), செமிஞ்சி ( 8 ) மற்றும் பெரானாங் (4) ஆகிய இடங்களில் உள்ளன என்று அந்தத் துறை பேஸ்புக்கில் தெரிவித்துள்ளது.

பெட்டாலிங்கில் 49 நோய்த் தொற்றுகள் பதிவாகியுள்ளன, அதாவது டாமான்சாரா , மற்றும் பெட்டாலிங் துணை மாவட்டத்தில் தலா 16 நோய்த்தொற்று  சம்பவங்கள், சுங்கை புலோ (10) மற்றும் புக்கிட் ராஜா (ஏழு).

இதற்கிடையில், கோல சிலாங்கூரில் 29 நோய்த்தொற்றுகள் உள்ளன, அதாவது 11 நோய்த் தொற்றுகள் தஞ்சோங் காரங், ஈஜோக் (8), பத்தாங் பெர்ஜூந்தாய் (5 ), ஜெராம் (4 ) மற்றும் கோல சிலாங்கூர் துணை மாவட்டம் (ஒன்று).


Pengarang :