NATIONALUncategorized

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்

ஷா ஆலம், டிச 25 இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான  டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார்

சுதந்திர மலேசியாவின் 63 ஆண்டு கால வரலாற்றில் மக்கள் முற்றிலும் மாறுபட்ட  சூழ்நிலையில் இவ்வாண்டு கிறிஸ்துமஸ்  தினத்தையும், 2021 புது வருஷத்தையும் வரவேற்கவுள்ளனர். சோதனை மிக்க இந்த காலக்கட்டத்தை அனைத்து மக்களும் சுகமாக கடந்து செல்ல  இறைவன் நாட்டுக்கும் நாம் எல்லோருக்கும் வழிகாட்டடும்.

நமது முன்னோர்கள் அரும்பாடுப்பட்டு உருவாக்கிய இத்தேசத்தில் சிறப்பாக வாழ அனைவருக்கும்  இடமுண்டு, நாட்டில் வளமுண்டு ஆனால் அதற்கு உழைக்கவும், சிறு அர்பணிப்புகளை செய்யவும் நாம் தயாராக இருக்க வேண்டும். 

தவறான வழி  நடத்தல் நாட்டை பெரிய சுகாதார இடர்பாடுபாடுகளிலும், பொருளாதார சிக்கல்களிலும்  தள்ளிவிட்டுள்ளது.  இந்த கோவிட் 19 நோய் தொற்றுக் காலத்தில் அனைவரும் நம் குடும்பத்தினர் நலத்தையும் நாட்டு நலத்தைதும் கருத்தில் கொண்டு புதிய பாணியில் கிருஸ்மஸ் மற்றும் புத்தாண்டுகளை கொண்டாட வேண்டும்.

சமூக இடைவெளிகளை பின்பற்றுவதுடன், நோய் தொற்றுக்கு  எளிதில்  இலக்காகும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை ஒன்றுக்கூடல்களில் இருந்து தவிற்க வேண்டும். முகக் கவரியை பயன்படுத்துவதும், கைகளை சோப்பு போட்டு நன்கு தேய்த்து கழுவுதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க  நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்வதுடன், தினமும் 15 நிமிடங்களாவது சூரிய ஒளியில் நிற்கவும், பழங்கள் மற்றும் காய்கறிகள் உண்பதையும் குடும்பத்தில்  ஊக்குவிக்கவேண்டும். 

புது பாணியிலான இந்த வாழ்க்கை முறை பெரிய சமூக இடையீறுகளிலிருந்து நாம்  அனைவரையும் காக்கும் என்றார் அவர் .

நாம் நமது அண்டை அயலாருடன் ஒற்றுமையையும், புரிந்துணர்வையையும் வளர்க்க எல்லாப் பண்டிகைகளின் போதும் திறந்த இல்ல உபசரிப்புகளை நடத்தி வந்தோம். ஆனால் இவ்வாண்டு நாம் எதிர்நோக்கியுள்ள கோவிட் 19 நோய் தொற்றிலிருந்து நமக்கு விருப்பமானவர்களை காக்க அதனை கைவிடவோ அல்லது சிறிய அளவில் மேற்கொள்ள வேண்டியுள்ளது  என்றார்   கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான  டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.


Pengarang :