NATIONAL

கோவிட்-19 மரணச் சம்பவங்கள் அதிகரிப்பு- டான்ஸ்ரீ நோர் ஹிஷாம் அச்சம்

கோலாலம்பூர், ஜன 10– கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அண்மைய காலமாக அதிகரித்து வருவது குறித்து சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நோர் ஹிஷாம் அப்துல்லா அச்சம் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டின் முதல் ஒன்பது நாட்களில் மட்டும் இந்நோய்த் தொற்று காரணமாக 71 பேர் மரணமடைந்துள்ளதாக அவர் சொன்னார். கடந்தாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 100 மரணங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டதையும் அவர் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த ஆகக்கடைசி நிலவரங்கள் அச்சமூட்டும் வகையில் உள்ளதாக  டிவிட்டர் கணக்கின் வழி தனது கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

பதிவேற்றம் செய்யப்பட்ட ஒன்பது மணி நேரத்தில் நோர் ஹிஷாமின் இந்த பதிவுக்கு 9,334 லைக்குகள் கிடைத்துள்ளதோடு 7,856 பேர் அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். இது தவிர 232 பேர் தங்கள் கருத்துக்களையும் பதிவிட்டுள்ளனர்.

கோவிட்-19 தொடர்புடைய மரணச் சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதி செய்ய கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டை அரசாங்கம் அமல்படுத்த வேண்டும் என்று அரிப் ஜூபிர் என்பவர் கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று வரை 542  மரணச் சம்பவங்களை மலேசியா பதிவு செய்துள்ளது. நாட்டில் பதிவான 133,669 கோவிட்-19 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் இது 0.41 விழுக்காடாகும்.

 

 


Pengarang :