NATIONALPENDIDIKAN

கோவிட்-19 நோய் கண்ட மாணவர்கள்  தேர்வை மீண்டும் எழுத வாய்ப்பு

கோலாலம்பூர் 13– இம்மாத இறுதியில் முக்கியமானத் தேர்வுகள் நடைபெறவிருக்கும் வேளையில்  கோவிட்-19 நோய் உறுதிப்படுத்தப்பட்ட அல்லது தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்கள் தேர்வை மீண்டும் எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

மீண்டும் நடைபெறும் அத்தேர்வில் அமர்வதற்கு ஏதுவாக அம்மாணவர்கள் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டதை உறுதி செய்ய உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கல்வியமைச்சின் தேர்வு வாரிய இயக்குநர் டத்தோ பகாருடின் கசாலி கூறினார்.

சம்பந்தப்பட்ட மாணவர்கள் சிகிச்சைப் பெற்றதை அல்லது மருத்துவரைச் சந்தித்ததை உறுதி செய்வதற்கு அந்த ஆவணங்கள் உதவும் என்று அவர் சொன்னார்.

தேர்வை எழுதுவதற்குரிய வாய்ப்பிருந்தும் அதனை தவிர்த்து விட்டு மீண்டும் நடைபெறும் தேர்வில் அமர விரும்புவோருக்கு ஒரு போதும் வாய்ப்பு வழங்கப்படாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார். நேற்று, பெர்னாமா வானொலிக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கடந்தாண்டிற்கான எஸ்.பி.எம். மற்றும் எஸ்.வி.எம். தேர்வுகள் இம்மாதம் 22ஆம் தேதி தொடங்குகின்றன. அதனைத் தொடர்ந்து எஸ்.பி.பி.எம். எஸ்.கே.எம்., எஸ்.டி.ஏ.எம். மற்றும் டி.வி.எம். தேர்வுகள் நடைபெறும்.

கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு  மீண்டும் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்று கல்வித் துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் ஹபிபா அப்துல் ரஹிம் கடந்த மாதம் கூறியிருந்தார்.

 


Pengarang :