வசதி குறைந்தவர்களுக்கு சுங்கை காண்டீஸ் சட்டமன்ற உறுப்பினர். உணவுப் பொருள்கள் வழங்கினார்

ஷா ஆலம், பிப் 15– நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக வருமானம் பாதிக்கப்பட்ட கம்போங் ஜாலான் கெபுனை சேர்ந்த 20 குடும்பங்களுக்கு சுங்கை காண்டீஸ் தொகுதி சார்பில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 11 மண்டலத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படும் இந்த உதவித் திட்டத்தின் கீழ் அரிசி, சமையல் எண்ணெய், முட்டை மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன.

பொருளாதார ரீதியில் பாதிப்பை எதிர்நோக்கியிருக்கும் மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த உதவிப் பொருள்கள் வழங்கப்படுவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜவாவி அகமது கூறினார்.

லோரோங் சர்க்காவி குடியிருப்பாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் முகமது ஜவாவி இப்பொருள்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்த உதவித் திட்டம்  குறைந்த வருமானம் பெறுவோரின் அன்றாடச் செலவுகளை குறைக்க உதவும் என்பதோடு பிள்ளைகள் வீட்டிலிருந்தவாறு கல்வி கற்பதற்கு உண்டாகும் செலவை இதன் மூலம் ஈடுட்ட இயலும் என்று அவர் சொன்னார்.


Pengarang :