NATIONALSELANGOR

எஸ்.ஒ.பி. விதிமுறையை பின்பற்றுவீர்- பணிக்குத் திரும்பிய ஊழியர்களுக்கு நினைவுறுத்து

ஷா ஆலம், ஏப் 1- இன்று முழு அளவில் பணிக்கு திரும்பியுள்ள ஊழியர்கள் கோவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) முறையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான நோய்த் தொற்று மையங்கள் வேலையிடங்களில் தோன்றுவதை கருத்தில் கொண்டு ஊழியர்கள் மிகுந்த கவனப்போக்குடன் செயல்படுவதோடு நோய்த் தொற்று பரவலைக் குறைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று  சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கூறினார்.

வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை முடிவுக்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து ஊழியர்களும் இன்று தொடங்கி அலுவலகத்திலிருந்து பணியை மேற்கொள்ள பணிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புகான முதன்மை அமைச்சர் டத்தோ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று கூறியிருந்தார்.

அலுவலகத்திலிருந்து வேலை செய்ய அரசாங்கம் வழங்கியுள்ள அனுமதியை கோவிட்-19 பெருந்தொற்றை நாம் வெற்றி கண்டு விட்டதாக அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது. மாறாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு ஏதுவாக அனைத்து துறைகளையும் முழுவீச்சில் செயல்படச் செய்வதற்கான நடவடிக்கை இதுவாகும் என்றார் அவர்.

வேலையிடங்களில் புதிய நோய்த் தொற்று மையங்கள் உருவாகாமலிருப்பதை உறுதி செய்வதற்காக ஊழியர்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்றி வர வேண்டும் என அவர் தெரிவித்தார்.


Pengarang :