JOHOR BAHRU, 11 Mac — Orang awam melihat sisa cecair kimia yang berkumpul di ‘Oil Boom’ yang dipasang bagi menyerap bahan sisa buangan daripada terus merebak semasa melalui Sungai Kim Kim ketika tinjauan Bernama di kampung tersebut hari ini. Pada Khamis lepas, Sekolah Menengah Kebangsaan Pasir Putih dan Sekolah Kebangsaan Pasir Puteh terpaksa ditutup berikutan pencemaran udara berikutan pembuangan sisa kimia di Sungai Kim Kim oleh pihak tidak bertanggungjawab awal pagi hari yang sama. –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
ALAM SEKITAR & CUACASELANGOR

கடும் உழைப்புக்கு அனைத்துலக அங்கீகாரம்- கும்புலான் செமெஸ்தா நிறுவனம் பெருமிதம்

கோலாலம்பூர், ஏப் 4– சிலாங்கூரில் கனிமவள நிர்வாகத்தை நிர்வகித்து வரும் கும்புலான் செமெஸ்தா சென். பெர்ஹாட் நிறுவனம் 2020ஆம் ஆண்டிற்கான அனைத்துலக ஆசியான் பிசினஸ் ரிவியூ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாண்டு கால கடும் உழைப்பு தங்களுக்கு உரிய பலனைத் தந்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி முகமது பைருஸ் கசாலி கூறினார்.

மணல் சார்ந்த கனிம வளம் சார்ந்த நிர்வாகத் துறையில் சிறந்த வர்த்தக ஸ்தாபனத்திற்கான விருதுக்கு ஐ.ஆர்.பி. ஆசியா குழும ம் தங்கள் நிறுவனத்தை தேர்ந்தெடுத்துள்ளது குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைவதாக அவர் தெரிவித்தார்.

மணல் சுரங்கத் துறையில் உருமாற்றத்தைக் கொண்டு வருவதற்கு கடந்த ஐந்தாண்டுகளாக நாங்கள் கடுமையாகப் பாடுபட்டோம். எதிர்காலத்தில் மேலும் சிறப்பான சாதனைகளை கும்புலான் செமெஸ்தா நிறுவனம் படைப்பதற்கு இந்த விருது ஒரு தூண்டுகோளாக அமைந்துள்ளது என்று அவர் சொன்னார்.

மாநிலத்தில் கனிமளவங்களை மேம்படுத்தும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் திட்டத்திற்கேற்ப கனிமவளத்துறையை குறிப்பாக ஈயலம்பங்களை வழிநடத்தும் தலையாய அமைப்பாக கும்புலான் செமெஸ்தா தொடர்ந்து விளங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தங்கள் நிறுவனம் இரண்டாவது முறையாக உயரிய விருதை  பெற்றுள்ளதாக கூறிய அவர், கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தாய்லாந்து, பேங்காக்கில்  நடைபெற்ற ஆசியான் கனிமவள  விருதளிப்பு நிகழ்வில் சிறந்த அமலாக்க பிரிவில் தங்களுக்கு விருது வழங்கப்பட்டது என்றார்.

 


Pengarang :