SELANGORYB ACTIVITIES

புக்கிட் பெருந்தொங், புக்கிட் செந்தோசா நகரங்கள் மறு மேம்பாடு காணும்- மந்திரி புசார் தகவல்

உலு சிலாங்கூர், ஏப் 10– பண்டார் புக்கிட் பெருந்தோங்  மற்றும் பண்டார் புக்கிட் செந்தோசா ஆகியவை மக்கள் வசிப்பதற்கு உகந்த சூழல் கொண்ட நகரங்களாக மறு மேம்பாடு காணவுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

டெஸ்கோ விநியோக மையம், பெரடுவார் கார்  தயாரிப்பு நிறுவனம், போலீஸ் பயற்சி மையம் உள்ளிட்ட திட்டங்களை இங்கு உருவாக்குவதன் மூலம் இப்பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளை சுறுசுறுப்பானதாக ஆக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

இது தவிர, குடியிருப்பு, வர்த்தக மையம் மற்றும் தொழில்பேட்டைகளை அமைப்பதற்காக ஆயிரம் ஏக்கர் நிலத்தை மாநில அரசு இங்கு அடையாளம் கண்டுள்ளதாக அவர் சொன்னார்.

இத்தகைய நீண்ட காலத்திட்டங்களின் வாயிலாக பண்டார் புக்கிட் பெருந்தோங் மற்றும் பண்டார் உலு சிலாங்கூரை பிற நகரங்களுக்கு இணையான வளர்ச்சி கண்ட பகுதிகளாக  உருவாக்க முடியும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இங்குள்ள தாமான் பூங்கா ராயாவில் 250,000 வெள்ளி மதிப்பிலான சிலாங்கூர் கூ முதல் கட்டத் திட்டத்தில் வீடுகளை வாங்கியோரிடம் சாவிகளை ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த சிலாங்கூர் கூ திட்டத்தின் கீழ் 26.8 ஹெக்டர் நிலப்பரப்பில்  419 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. முதல் கட்டமாக 109 வீடுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் எஞ்சிய வீடுகள் நிர்மாணிப்பில் உள்ளன.


Pengarang :