ECONOMYSELANGOR

எஸ்.ஒ.பி. விதிகளை மீறும் தீயணைப்பு வீர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

ஷா ஆலம், மே 4- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது அமல் செய்யப்பட்டுள்ள நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) பின்பற்றத் தவறும்  வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை  ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்.

எஸ்.ஒ.பி. விதிமுறைகளை மீறியதற்காக உயர் அதிகாரி உள்பட இருவர் மீது தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது ஹம்டான் வாகிட் கூறினார்.

உரிய ஆவணங்கள் இன்றி எல்லை கடக்க முயன்றதற்காக ஒருவர் சாலைத் தடுப்பில் தடுத்து வைக்கப்பட்ட வேளையில் சபாவில் உள்ள தன் குடும்பத்தினரின் வியாபாரத்தை நிரணயிக்கப்பட்ட நேரத்திற்கும் கூடுதலாக நடத்தியதற்காக மற்றொருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

மாநில எல்லை கடப்பதாக இருந்தால் தீயணைப்பு வீர்களும் மற்றவர்களைப் போல் பாரங்களை முறையாக பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களை உடன் இணைக்க வேண்டும்.  அதிகாரத்துவ பணிகளின் போதும் ஆபத்து அவசர வேளைகளிலும் மட்டுமே எல்லைகளை கடக்க முடியும் என்றார் அவர்.

இத்தகைய விதி மீறல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது  கட்டொழுங்கு நடவடிக்கை எடுக்க தமது துறை தயங்காது என்றும் அவர் எச்சரித்தார்.

இந்த எஸ்.ஒ.பி. விதிமுறைகள் நீண்ட நாட்களாக அமலில் இருந்து வரும் நிலையில் அது குறித்த தெளிவான புரிதல் எனது அதிகாரிகளுக்கு இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது என்றும் அவர் குறிப்பிட்டார்


Pengarang :