ECONOMYSELANGOR

3வது நடமாட்டக்  கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் பொருளாதார உதவி உண்டா?

செர்டாங், 15 மே: நடமாட்டக்  கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி) 3.0 காலம் தொடர்ந்தால் மக்களுக்கு உதவுவதற்கான புதிய பொருளாதார உதவிகளின் தொகுப்புகளை வழங்கும் வாய்ப்பை மாநில அரசு நிராகரிக்கவில்லை.

மாநிலத்தில் திடீரென தொற்றுகள் அதிகரித்தால் கோவிட் -19 பரிமாற்றத்தின் தற்போதைய நிலைமையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுவதாக டத்தோ மந்திரி புசார் டத்தோ’ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

“இது நீண்ட கால வீதத்தைப் பொறுத்தது. இருப்பினும், இந்த முறை பி.கே.பி 1.0 போன்றதல்ல, அப்பொழுது அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் மூடினோம், ஆனால் இந்த முறை 30 சதவிகிதத்தை செயல்பட அனுமதிக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

நேற்று இங்குள்ள கோவிட் -19 தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை மையம் (பி.கே.ஆர்.சி) க்கு வருகையளித்தப் போது மலேசியா வேளாண் எக்ஸ்போ பார்க்கில் நோயாளிகளுக்கு நோன்பு பெருநாள் உணவுகளை வழங்கி (எம்.இ.பி.எஸ்) பார்வையிட்ட பின்னர் அவர் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், சிலாங்கூரில் பொருளாதார நடவடிக்கைகளை மூட சில தரப்புகளிலிருந்து அழுத்தம் இருப்பதை அமிருடின் ஒப்புக்கொண்டார். இந்த நிலைமை சிக்கலான சூழ்நிலை, குறிப்பாக தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) படுக்கைகளின் தேவைகளின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக அதிகரிப்பும் காரணமாக இருந்தது என்றார்.

“பிப்ரவரி முதல் மே வரை வேலை செய்யும் இடங்களில் தொற்று சம்பவங்களும் 40 முதல் 45 சதவிகிதம் வரை அதிகமாக இருந்தன. ஆனால் கடந்த ஐந்து முதல் ஆறு நாட்களில், தொற்றுகள் 20 சதவிகிதமாக குறைந்து, நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளன,” என்று அவர் கூறினார்.


Pengarang :