HEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் இன்று 6,976 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர், மே 23- நாட்டில் இன்று மொத்தம் 6,976 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. இந்நோய்த் தொற்று ஏற்பட்டது முதல் நாட்டில் பதிவான மிக அதிக எண்ணிக்கையிலான சம்பவம் இதுவாகும்.

கடந்த வியாழக்கிழமை 6,806 சம்பவங்கள் பதிவான வேளையில் இன்றைய சம்பவங்களின் எண்ணிக்கை அதையும் கடந்து விட்டதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ  டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இதன் வழி நாட்டில் இந்நோய்த் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 512,091ஆக உயர்வு கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலங்களில் சிலாங்கூர் முதலிடம் வகிக்கிறது. இங்கு 2,235 பேர் இந்நோயினால் பீடிக்கப்பட்டுள்ள வேளையில் அதற்கு அடுத்த நிலையில் சரவாவும் (663) கிளந்தானும் (626) உள்ளன.

ஜோகூர் (549), கோலாலம்பூர், (447), நெகிரி செம்பிலான் (434), கெடா (422), பினாங்கு (372), பேராக் (279), திரங்கானு (226), பகாங் (263), மலாக்கா (209), சபா(136) ஆகிய மாநிலங்கள் அதற்கு அடுத்த நிலையில் உள்ளன.

புத்ரா ஜெயாவில் 30 சம்பவங்கள் பதிவான வேளையில் லபுவானில் 37 சம்பவங்களும் பெரிலிசில் 8 சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டன.


Pengarang :