HEALTHNATIONAL

செம்பனை எண்ணெய் தொழிற்சாலையில் எண்ணெய் கசிவு- நீர் மாசுபடுவது தவிர்க்கப்பட்டது

ஷா ஆலம், ஜூன் 15– செமினியில் உள்ள செம்பனை எண்ணெய் தொழிற்சாலை ஒன்றில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. எனினும், லுவாஸ் எனப்படும் சிலாங்கூ நீர் நிர்வாக வாரியத்தின் துரித நடவடிக்கையால் நீர் வளங்கள் மாசுபடுவது தவிர்க்கப்பட்டது.

இந்த எண்ணெய் கசிவு சம்பவம் தொடர்பில்  நேற்று இரவு 7.00 மணிக்கு தகவல் கிடைக்கப்பெற்றதாக சுற்றுச் சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடத்திற்கும் சுங்கை செமினி நீர்  சுத்திகரிப்பு மையத்திற்கும் இடையிலான து ரம் 15.9 கிலோ மீட்டராகும் என்று அவர் சொன்னார்.

சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு மையத்தில் நீர் மாசுபடும் அபாயத்தை கருத்தில்  கொண்டு லுவாஸ் இந்த எண்ணெய் கசிவு சம்பவம் மீது விரிவான ஆய்வினை மேற்கொண்டதாக அவர் சொன்னார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எண்ணெய் கசிவுகள் ரிஞ்சிங் ஆற்றில் கலப்பதை தடுக்கும் விதமாக அந்த தொழிற்சாலையிலிருந்து நீர் வெளியேறும் பகுதிகளில் நான்கு மூட்டை கரி அடுக்கி வைக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

அங்குள்ள நீர் வழித்தடங்களில் தேங்கியுள்ள எண்ணெய் கசிவுகளை உறிஞ்சி வெளியேற்றும் பணிகள் அடுத்த 24 மணி நேரத்தில் முற்றுப் பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :