HEALTHMEDIA STATEMENTSELANGOR

தடுப்பூசியை கொள்முதல் செய்ய தனியார் துறையினருக்கு அனுமதியளிப்பீர்- எலிசபெத் வோங் கோரிக்கை

ஷா ஆலம், ஜூன் 27– தனியார் துறையினர் வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசிகளை தருவிப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்று புக்கிட் லஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் எலிசபெத் வோங் கேட்டுக் கொண்டுள்ளார்.

நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட குழுமத்தை உருவாக்கும் முயற்சிளை விரைவுபடுத்த  இந்நடவடிக்கை பெரிதும் துணை புரியும் என்று அவர் சொன்னார்.

தடுப்பூசி பெறுவோரின் எண்ணிக்கை நாட்டில் குறிப்பாக சிலாங்கூர் மாநிலத்தில் மிகவும் குறைவாக உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இதனால் கோவிட்-19 நோய்த் தொற்றை குறைக்கும் முயற்சிகள் பாதிப்புறும் சாத்தியம் உள்ளது உள்ளது என்றார்.

தினசரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டாலும் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி முற்றுப் பெற ஆறு மாத காலம் பிடிக்கும் என்றார் அவர்.

அதிகமான தரப்பினர் இந்த தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் பங்கு கொண்டால் சிறப்பாக இருக்கும். ஆகவே, மருத்துவமனைகள் உள்பட தனியார் துறையினர் வெளிநாடுகளிலிருந்து அதிகாரப்பூர்வமாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கு எதுவாக விதிமுறைகளில் அரசாங்கம் தளர்வை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் சொன்னார்.

கோவிட்-19 நோய்த் தொற்று கட்டுப்படுத்துவது தொடர்பான விவாத நிகழவொன்றில் பங்கு கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.

நோய்த் தொற்றுக்கான அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்கள் மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தே தங்கள் உடல் நிலையை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக சுய பரிசோதனை கருவிகளை குறைந்த விலையில் விற்பதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

 


Pengarang :