HEALTHMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் அரசின் தடுப்பூசிக்கு 50,000 தொழிற்சாலைகள் விண்ணப்பம்

ஷா ஆலம், ஜூலை 1- செல்வேக்ஸ் எனப்படும் தொழில்துறைக்கான சிலாங்கூர் மாநில தடுப்பூசித் திட்டத்தின்  மூலம் தடுப்பூசி வாங்குவதற்கு ஐம்பாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் முன்வந்துள்ளன.

இம்மாதம் 16ஆம் தேதி வரை இதற்கான அளிப்பாணைகளை தொழிற்சாலைகள் வழங்கியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். இதன் வழி இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தடுப்பூசி பெறுவதற்கு  பதிவு செய்துள்ளனர் என்றார் அவர்.

இத்தகைய ஆதரவின் மூலம் சிலாங்கூர் மாநில நிலையில் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை நாம் விரைந்து மேற்கொள்ளவும் நோய்த் தடுப்பாற்றல் கொண்ட குழுமத்தை உருவாக்கவும் இயலும் என நம்புகிறோம் என அவர் தெரிவித்தார்.

இது சிலாங்கூர் அரசின் முயற்சி மட்டுமல்ல. மாறாக, தொழிற்சாலைகளும் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான நமது போராட்டத்தில் பங்கேற்க விரும்புகின்றன என்றார் அவர்.

செவேக்ஸ் திட்டத்தின் கீழ் டிரோப்பிகானா கார்டன் மாலில் மேற்கொள்ளப்படும் தடுப்பூசித் திட்டத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

வேலையிடங்களில் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக அந்நிய நாட்டினர் உள்பட பத்து லட்சம் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த மாநில அரசு இருபது லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கியுள்ளது.


Pengarang :