34,191 வர்த்தக மையங்களில் எஸ்.ஒ.பி அமலாக்கம் மீது கண்காணிப்பு: பெ. ஜெயா மாநகர் மன்றம் தகவல்

ஷா ஆலம், செப் 30- இவ்வாண்டு மே மாதம் 7 ஆம் தேதி முதல் செப்டம்பர் 26 ஆம் தேதி வரை 34,191 வர்த்தக மையங்களில் எஸ்.ஒ.பி விதிமுறை அமலாக்கம் மீது  பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் சோதனை மேற்கொண்டது.

இச்சோதனை நடவடிக்கையில் 14,356  அங்காடி வியாபாரிகள், 10,389 வணிக மையங்கள், 3,625 உணவகங்கள், 2,553 சந்தைகள், 2,147 இடர் லைசன்ஸ் மையங்கள், 959 பொழுதுபோக்கு மையங்கள் மற்றும்  162 தொழில் துறைகள் இடம் பெற்றிருந்ததாக மாநகர் மன்றம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

இந்நடவடிக்கையில் 4 ,071 மையங்களுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக துணை டத்தோ பண்டார் ஷரிபா மர்ஹாய்னி சைட் அலி அவ்வறிக்கையில் கூறினார்.

அவற்றில் 3,626 மையங்களுக்கு அபராதமும் 230 மையங்களுக்கு வர்த்தகத்தை மூடுவதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்ட வேளையில் 90 மையங்களில் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு 86 மையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்றார் அவர்.

வணிகர்களும் பொதுமக்களும் எஸ்.ஒ.பி விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பதை உறுதி செய்ய மாநகர் மன்றம் ரோந்து, சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேலும் விரிவான அளவில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“

Pengarang :