சிலாங்கூர் ஸ்மார்ட் பஸ் சேவையை 2022 பட்ஜெடில், தொடர்ந்து பராமரிக்குமா?

பூச்சோங், 5 நவம்பர்: 2022 பட்ஜெட் சிலாங்கூர் ஸ்மார்ட் பஸ் சம்பந்தப்பட்ட பொதுப் போக்குவரத்து ஒதுக்கீட்டை தொடர்ந்து பராமரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஊராட்சி மன்றங்கள், பொது போக்குவரத்து, புதுக் கிராம மேம்பாடு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

 இந்தச் சேவைக்கு மக்களிடம் நல்ல தேவையும், வரவேற்பும் உள்ளது என்றார் அவர். “இந்த திட்டம் (சிலாங்கூர் ஸ்மார்ட் பஸ்) மிகவும் வெற்றிகரமானது மற்றும் சிலாங்கூர்  மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்றார். 

“வழங்கப்படும் பட்ஜெட்டில் பொருளாதாரத்தை, குறிப்பாக B40 குழுவை சார்ந்த மக்களுக்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பதில் கவனம் செலுத்தும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

 அவர் நேற்று சுபாங் ஜெயா சிட்டி கவுன்சில் (MBSJ) பூச்சோங் இந்தான் பல்நோக்கு மண்டபத்தில் இளம் பருவத்தினருக்கான தேசிய கோவிட்-19 நோய் தடுப்பு திட்டத்திற்கு (பிக்) வருகையளித்தப் பின் இதனைத் தெரிவித்தார்.

 கடந்த, அக்டோபர் 8 அன்று, டத்தோ மந்திரி புசார் டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷாரி 2022 பட்ஜெட் விளக்கக் கூட்டத்தின் மூலம் 2022 பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் (ADN) சிலாங்கூர் சமூகத் தலைவர்களுடனும் உரையாடினார்.

 சிலாங்கூர் பட்ஜெட் சமர்பிப்பு நவம்பர் 26 அன்று மாநில சட்டமன்ற கூட்டத்தில் முன் வைக்கப்பட்டு, ஒரு வார விவாதத்திற்குப் பின் டிசம்பரில் அங்கீகரிக்கப்படும்  என எதிர் பார்க்கப் படுகிறது.


Pengarang :