ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இடைத் தேர்தலில் இந்தியர்கள் பிளவுபடாத ஆதரவை 2ம் எண் வேட்பாளர் பாங்கிற்கு அளிக்க- மந்திரி புசார் கோரிக்கை

செய்தி ; சு.சுப்பையா

பாத்தாங் காலி.மே.10- கடந்த 13 நாட்களாக கோல குபு பாரு இடைத் தேர்தலில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஒற்றுமை அரசு ஈடுபட்டு வந்தது. இரவு 12.00 தேர்தல் பிரச்சாரம் அதிகாரப்பூர்வமாக நிறைவு பெறுகிறது. இறுதி நாள் தேர்தல் பிரச்சார உரையில் கோல குபு பாரு இந்தியர்கள் ஒற்றுமை அரசு வேட்பாளருக்கு பிளவுபடாத ஆதரவு வழங்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார்.

சிலாங்கூர் மாநில இந்தியர் நிர்வாக சங்கத்தின் சார்பில் இறுதி பிரச்சாரக் கூட்டம் பத்தாங் காலி, லிகா மாஸ் வட்டாரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுமார் 600 இந்தியர்கள் திரளாக கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பி.கே.ஆர் கட்சியின் இந்தியத் தலைவர்கள், ம.இ.கா. தலைவர்கள், ஐ.பி.எப் கட்சித் தலைவர்கள் என்று இந்தியர்கள்  திரளாக கலந்து கொண்டனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு முதன் முறையாக அதிகாரப்பூர்வமாக ஒற்றுமை அரசு உருவானது அன்று முதல் இன்று வரை நமது அரசாங்கத்தில் 19 கட்சிகள் கூட்டணியாக உள்ளது.

ஒற்றுமை அரசாங்கத்தில் நாட்டில் உள்ள எல்லா இனங்களும் ஒற்றுமையாக செயல் படுகின்றன. இந்த ஒற்றுமையை நாம் தொடர்ந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்.

சிலாங்கூரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்படாமல் இருந்த 5 தோட்டத் தொழிலாளர்கள் சொந்த வீட்டு பிரச்சனை, காசல் பீல்ட்ஸ் தோட்ட தமிழ்ப்பள்ளி பிரச்சனை, 200 ஆலயங்கள் பிரச்சனை, தென்னை மரம் தோட்ட இந்தியர் நிலப் பிரச்சனை என்று பல இந்தியர்கள் பிரச்சனைகள் முறையாக தீர்வு காணப்பட்டுள்ளது என்று மந்திரி புசார் சுட்டிக்காட்டினார்.

இதேபோல் இந்திய தொழில் முனைவர்கள் பிரச்சனைகள் தீர்வு காண சித்தாம் மற்றும் ஐ-சிட் திட்டம் உள்ளன. இத்திட்டத்திற்கு ஆண்டுதோறும் ரி.ம. 2 மில்லியன் ஒதுக்கப் படுகிறது. சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகள் மற்றும் மாணவர்களின் நலன் காக்க ரி.ம. 5 மில்லியன் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

சிலாங்கூர் எல்லா மக்களும் எந்தவித பாகுபாடின்றி கட்டிக் காக்க படுகின்றனர். இந்தியர்கள் தொடர்ந்து நம்மோடு இணைந்திருக்க வேண்டும். நமது வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பி.கே.ஆர் கட்சியில் மொத்தம் 9 தொகுதிகள் இந்தியர்கள் தலைவர்களாக  செயல் படுகின்றனர். இதில் பெரும்பான்மையான தலைவர்கள் இறுதி பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிட தக்கது.


Pengarang :