Lori Malaysia yang melepasi pemeriksaan di Imigresen Woodlands menghala ke Johor Bharu dari Singapura pada 16 April 2002. Foto AFP

பண்டார் ஸ்ரீ ஏசானில் வெள்ளம்- பயணத் தொடர்புக்கு உதவிய மணல் லோரிகள்

பந்திங், டிச 23- இங்குள்ள பண்டார் ஏசானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்வர்களின் பயணத் தொடர்பு சாதனமாக மணல் லோரிகள் பயனபடுத்தப்பட்டன.

அந்த குடியிருப்பு பகுதிக்கான ஒரே நுழைவாயில் வெள்ளத்தில் மூழ்கியதைத் தொடர்ந்து அந்த குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் வெளியில் சென்று வர நெடுஞ்சாலை மேம்பாட்டு நிறுவனத்திற்கு சொந்தமான மணல் லோரிகளைப் பயன்படுத்தினர்.

அந்த பிரதான சாலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் இரண்டு மீட்டர் உயரத்திற்கு நீர் சூழந்துள்ளதால் நான்கு சக்கர இயக்க வாகனங்கள் மற்றும் பெரிய லோரிகள் மட்டுமே அச்சாலையை பயன்படுத்த முடிவதாக பண்டார் ஏசான் குடியிருப்பாளர் சங்கத் தலைவர்  அகமது கமால் மிஸ்வான் கூறினார்.

மின்சாரம் மற்றும தொலைத் தொடர்பு சேவைகளும் துண்டிக்கப்பட்டதால் அங்கு வசிக்கும் 1,200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3,500 பேர் பெரும் சிரமத்திற்கு ஆளானதாக அவர் குறிப்பிட்டார்.

நெடுஞ்சாலை மேம்பாட்டு நிறுவனம் தங்களின் கோரிக்கையை ஏற்று மணல் லோரிகளை வழங்க முன்வந்ததாக கூறிய அவர், இதன் மூலம் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்குபொது மக்கள் வெளியில் சென்று வருவதற்குரிய வாய்ப்பு கிட்டியது என்றார் அவர்.

இச்சேவை தினமும் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இலவசமாக லழங்கப்படுவதாகவும் அவர் சொன்னார்

Pengarang :