ANTARABANGSAMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

இணைய சேவையை மேம்படுத்த யுனிசெல் பல்கலைக்கழகத்திற்கு வெ. 30 லட்சம் மானியம்

பெஸ்தாரி ஜெயா, பிப் 5- சிலாங்கூர் பல்கலைக்கழகத்தின் (யுனிசெல்) இணைய தரவு சேவையை மேம்படுத்த சிலாங்கூர் மாநில அரசு இவ்வாண்டில் 30 லட்சம் வெள்ளி மானியம் வழங்குகிறது.

கடந்தாண்டு நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட இவ்வாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த மானியம் ஒதுக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கல்வி மீது அக்கறையும் ஈடுபாடும் கொண்ட அரசாங்கம் என்ற முறையில் இணைய தரவு சேவையை மேம்படுத்துவதற்காக யுனிசெல் பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசு 30 லம்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது என்று அவர் சொன்னார்.

இந்த நிதி ஒதுக்கீடு மாணவர்களுக்கு கூடுதல் வசதியையும் மாநில அரசுக்கு சொந்தமான இந்த உயர்கல்விக் கூடத்தின் போட்டியிடும் ஆற்றலை மேம்படுத்தவும் துணை புரியும் எனத் தாங்கள் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

பெஸ்தாரி ஜெயாவிலுள்ள யுனிசெல் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மண்டபத்தில் இன்று நடைபெற்ற 15வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய போது அப்பல்கலைக்கழகத்தின் இயக்குநர் வாரியத் தலைவருமான அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வரும்2025 ஆம் ஆண்டில் சிலாங்கூரை விவேக மாநிலமாக்கும் திட்டத்திற்கேற்ப இணைய தரவு சேவை மேம்படுத்தப்படுவது அவசியம் என்று மாநில அரசு கருதுவதாக  அவர் கூறினார்.

 


Pengarang :