NATIONALPENDIDIKAN

எஸ்.எஸ்.பி.என். சேமிப்புத் திட்டத்திற்கு 3 விழுக்காடு லாப ஈவு- பி.டி.பி.டி.என் அறிவிப்பு 

கோலாலம்பூர், பிப் 23– தேசியக் கல்வி சேமிப்புத் திட்டத்திற்கு (எஸ்.எஸ்.பி.என்.) 3 விழுக்காடு லாப ஈவுத் தொகை வழங்கப்படுவதாகத் தேசிய உயர்கல்வி கடனுதவிக் கழகம்  (பி.டி.பி.டி.என்.) அறிவித்துள்ளது.

அத்திட்டத்தின் கீழுள்ள இரு சேமிப்புகளான எஸ்.எஸ்.பி.என். பிரைம் மற்றும் எஸ்.எஸ்.பி.என். பிளஸ் ஆகியவை இந்த லாப ஈவுத் தொகையைப்  பெறுவதாகப் பி.டி.பி.டி.என் தலைவர் டத்தோ வான் சைபுல் வான் ஜான் கூறினார்.

இதன் வழி பி.டி.பி.டி.என்.னில் வைப்புத் தொகை வைத்திருக்கும் 52 லட்சத்து 40 ஆயிரம் பேர் 20 கோடியே 62 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை லாப ஈவுத் தொகையாகப் பெறுவர் என்று அவர் சொன்னார்.

பி.டி.பி.டி.என் பெற்ற வைப்புத் தொகைகள் மீது செய்யப்பட்ட முதலீடுகள் வாயிலாக கிடைக்கப் பெற்ற நிகர வருமானத்தின் அடிப்படையில் அதன் உறுப்பினர்களுக்கு லாப ஈவு பகிர்ந்தளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

நடப்பு கணக்கு மற்றும் நிரந்தர வைப்புத் தொகையுடன் ஒப்பிடுகையில் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட லாப ஈவுத் தொகை இன்னும் ஆக்ககரமானதாக விளங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :