வெளிநாட்டு ஹாலால் சந்தைகளில் சிலாங்கூர் அரசு, எம்.பி.ஐ. ஊடுருவும்

ஷா ஆலம், மார்ச் 5- வெளிநாட்டு ஹாலால் சந்தைகளில் ஊடுருவும் முயற்சியில் சிலாங்கூர் அரசும் எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கழகமும் ஈடுபட்டுள்ளன.

ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவிலும் ஹாலால் சந்தைகளை விரிவு படுத்தும் வாய்ப்பினை சிலாங்கூர் கொண்டுள்ளதாக ஹாலால் தொழில்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி கூறினார்.

நான் அண்மையில்தான் இங்கிலாந்து சென்று திரும்பினேன். ஹாலால் துறையை விரிவுபடுத்த ஐரோப்பிய சந்தைகளில் மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது என்று அவர் சொன்னார்.

சவூதி அரேபியா போன்ற மேற்கு ஆசிய நாடுகளில் புதிய சந்தைகளை கண்டறிவதில் ஆர்வம் கொண்ட தொழில்துறையினரை அடையாளம் காணும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம் என் அவர் மேலும் தெரிவித்தார்.

சிலாங்கூர் அனைத்துலக ஹாலால்  மாநாட்டை முன்னிட்டு நேற்று சுபாங்கில் நடைபெற்ற விருந்து நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைச் சொன்னார்.

செல்ஹாக் எனப்படும் இந்த மாநாட்டை சிலாங்கூர் மாநில அரசு சிலாங்கூர் அனைத்துலக ஹாலால் அமைப்புடன் இணைந்து நடத்துகிறது. ஆய்வரங்கு, கண்காட்சி மற்றும் ஈடான வணிகம் என மூன்று பிரிவுகளாக நடத்தப்படும் இந்த மாநாடு ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் கடந்த வெள்ளிக் கிழமை தொடங்கி ஞாயிற்றுக் கிழமை வரை நடைபெறுகிறது.


Pengarang :