ANTARABANGSAHEALTH

கோவிட்-19 முழுமையாக அகலும் சாத்தியம் தற்போதைக்கு இல்லை- நிபுணர்கள் கருத்து

வாஷிங்டன், மார்ச் 8- கோவிட்-19 பெருந்தொற்று முற்றாக அகல்வதற்கான சாத்தியம் தற்போதைக்கு இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பொது மக்கள் இவ்விவகாரத்தில் நீக்குபோக்குடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதோடு தங்கள் பகுதிகளில் கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் முககவசங்களை அணிவது, கூடல் இடைவெளியைக் கடைபிடிப்பது போன்ற பாதுகாப்பு அம்சங்களைப் பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

அமெரிக்காவில் கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் குறைந்து வருவதாகச் சீனாவின் ஷின்ஹூவா செய்தி நிறுவனம் கூறியது.

கோவிட்-19 நோய்த் தொற்று அதிகம் இருந்த மாவட்டங்களில் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி 1,200 ஆக இருந்த நோய்த் தொற்று எண்ணிக்கை மார்ச் 3 ஆம் தேதி 472 ஆகக் குறைந்துள்ளதைச் சமூக நிலையிலான கோவிட்-19 தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் (சி.டி.சி.) புதுப்பிக்கப்பட்ட தரவுகள் காட்டுகின்றன.

சி.டி.சி. தரவுகளின் படி 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் குறைவான அல்லது மிதமான நோய்த் தாக்கம் கொண்ட பகுதிகளில் வசிக்கின்றனர்.

அமெரிக்கர்களில் சுமார் 35 விழுக்காட்டினர் இன்னும் தடுப்பூசியை முழுமையாகப் பெறவில்லை என்பதை சி.டி.சி.யின் தரவுகள் காட்டுகின்றன.

மூன்று விழுக்காட்டு அமெரிக்கர்கள் அல்லது 90 லட்சம் பேர் நோய் எதிர்ப்பு குறைபாடு கொண்டவர்களாகவும் எந்த இடத்தில் இருந்தாலும் கடும் நோய்க்கு ஆட்படும் ஆபத்து உள்ளவர்களாவும் இருப்பதாகச் சி.என்.என். செய்தி நிறுவனம் தெரிவித்தது.


Pengarang :