HEALTHNATIONAL

கோவிட்-1 9 நோயினால் நேற்று 30,246 பேர் பாதிப்பு- 113 மரணங்கள் பதிவு

ஷா ஆலம், மார்ச் 10- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 30,246 ஆகப் பதிவானதாகச் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இந்நோய் காரணமாக நேற்று 1,928 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறிய அவர், இதனுடன் சேர்த்துத் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 8,570 ஆக உயர்ந்துள்ளது என்று சொன்னார்.

நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 734 பேர் அல்லது 38.1 விழுக்காட்டினர் மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பையும் 1,195 பேர் அல்லது 61.9 விழுக்காட்டினர் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பையும் எதிர்நோக்கியுள்ளனர் என்றார் அவர்.

நேற்று நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 99.26 விழுக்காட்டினர் அல்லது 30,023 பேர் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்புக்கு உள்ளானவர்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பிரிவு வாரியாகக் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-

1 ஆம் பிரிவு- 9,797 சம்பவங்கள் (32.39 விழுக்காடு)

2 ஆம் பிரிவு- 20,226 சம்பவங்கள் (66.87 விழுக்காடு)

3 ஆம் பிரிவு- 115 சம்பவங்கள் (0.38 விழுக்காடு)

4 ஆம் பிரிவு- 54 சம்பவங்கள் (0.18 விழுக்காடு)

5 ஆம் பிரிவு- 54 சம்பவங்கள் (0.18 விழுக்காடு)


Pengarang :