HEALTHNATIONAL

கோவிட்-19 தாக்கம் குறைகிறது- நேற்று 22,030 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர், மார்ச் 15– கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை மேலும் குறைந்து 22,030 ஆக நேற்று பதிவானது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 22,535 ஆக இருந்தது.

நேற்றைய தொற்றுகளில் 8,616 அல்லது 39.11 விழுக்காடு முதலாம் கட்டப் பாதிப்பையும் 13,188 சம்பவங்கள் இரண்டாம் கட்டப் பாதிப்பையும் 226 சம்பவங்கள் அல்லது 1.03 விழுக்காடு மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பையும் கொண்டிருந்ததாகச் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

நேற்று மொத்தம் 33,872 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்ததாகக் கூறிய அவர், இதனுடன் சேர்த்து இந்நோயிலிருந்து விடுபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 2 ஆயிரத்து 760 ஆக உயர்ந்துள்ளது என்றார்.

இந்நோய் தொற்று காரணமாக நேற்று 1,521 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் அவர்களில் 634 பேர் அல்லது 41.7 விழுக்காட்டினர் மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பையும் 887 பேர் அல்லது 58.3 விழுக்காட்டினர் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பையும் கொண்டிருந்தனர் என்றார் அவர்.

செயற்கை சுவாசக் கருவியைப் பயன்படுத்தும்  நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று சற்றுக் குறைந்து 215 ஆகப் பதிவானது. கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்த எண்ணிக்கை 222 ஆக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :