ECONOMYHEALTHNATIONAL

கோவிட் -19 தினசரி தொற்றுகள் 27,004 ஆக குறைந்தது

ஷா ஆலம், மார்ச் 18: தினசரிக் கோவிட் -19 தொற்றுகள் நேற்று 27,004 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளன, முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 1,294 சம்பவங்கள் குறைந்துள்ளதாக சுகாதார தலைமை இயக்குநர் தெரிவித்தார்.

தீவிரத் தொற்றுகள் அல்லது மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தில் 199 சம்பவங்கள் அல்லது 0.74 விழுக்காடாக இருப்பதாகவும், அதே நேரத்தில் அறிகுறிகள் இல்லாத ஒன்றாம் கட்டம் மற்றும் லேசான அறிகுறிகள் கொண்ட இரண்டாம் கட்டம் 26,805 தொற்றுகள் அல்லது 99.26 விழுக்காடு என்றும் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

ஒன்பது புதிய கிளஸ்டர்களும் பதிவு செய்யப் பட்டுள்ளன, நேற்றைய நிலவரப்படி செயலில் உள்ள கிளஸ்டர்களின் எண்ணிக்கையை 340 ஆகியுள்ளது.

“மொத்தம் 1,669 தொற்றுகள் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டன. மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தில் உள்ள 674 தொற்றுகள் அல்லது 40.4 விழுக்காடு, 995 தொற்றுகள் அல்லது 59.6 விழுக்காட்டினர் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டத்தில் இருக்கின்றன.

“நேற்றைய நிலவரப்படி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் எண்ணிக்கை 7,856 பேர் அல்லது 2.6 விழுக்காடு மற்றும் அந்த எண்ணிக்கையில், தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) 148 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவையில்லை, அதே நேரத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள 225 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்பட்டது. “என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பின்வருபவை நோயாளிகளின் வகையின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன:

1 ஆம் கட்டம்: 11,163 சம்பவங்கள் (41.34 விழுக்காடு)

2 ஆம் கட்டம்: 15,642 சம்பவங்கள் (57.92 விழுக்காடு)

3 ஆம் கட்டம்:63 சம்பவங்கள் (0.23 விழுக்காடு)

4 ஆம் கட்டம்: 72 சம்பவங்கள் (0.27 விழுக்காடு)

5 ஆம் கட்டம்: 64 சம்பவங்கள் (0.24 விழுக்காடு)

நேற்று மொத்தம் 86 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இதில் மருத்துவமனைக்கு வெளியே 35 பேர் இறந்துள்ளனர், நேற்று 29,450 நோயாளிகள் குணமடைந்துள்ளனர், மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,596,453 ஆக உள்ளது.


Pengarang :