குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்துவது விரைவில் அறிவிக்கப்படும்

புத்ராஜெயா, மார்ச் 20 – குறைந்தபட்ச ஊதியம் RM1,500 என்ற விரிவான வழிமுறை மற்றும் அமலாக்கம் விரைவில் அறிவிக்கப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று வெளியிட்ட அறிவிப்பை வரவேற்ற சரவணன், மார்ச் 11ஆம் தேதியன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறினார்.

“ஊதியங்கள் மற்றும் தொழிலாளர்களின் நல்வாழ்வை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டுடன் இது தெளிவாக ஒத்துப்போகிறது. தொழிலாளர்களின் வாங்கும் திறன் அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தைத் தூண்டுவதற்கு இந்த நடவடிக்கை சாதகமான பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ”என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நேற்று, இஸ்மாயில் சப்ரி அரசாங்கம் குறைந்தபட்ச ஊதியத்தை மாதத்திற்கு RM1,500 ஆக உயர்த்தியுள்ளதாகவும், மேலும் இது மே 1 முதல் நாடு முழுவதும் சில நிறுவனங்களுக்கு செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.

புதிய குறைந்தபட்ச ஊதியம் ஆரம்பத்தில் பெரிய நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களுக்கு (ஜிஎல்சி) பொருந்தும் என்று பிரதமர் கூறினார்.

குறைந்தபட்ச ஊதியம் கடைசியாக பிப்ரவரி 1, 2020 அன்று மறுஆய்வு செய்யப்பட்டு, பட்ஜெட் 2020 தாக்கல் செய்யும் போது RM1,100 இலிருந்து RM1, 200 ஆக RM100 உயர்த்தப்பட்டது.


Pengarang :