ANTARABANGSANATIONAL

ஏப். 1 ஆம் தேதி சிங்கப்பூர்-மலேசிய தரை மார்க்க எல்லை திறப்பு- தனிமைப்படுத்தும் நிபந்தனை நீக்கம்

ஷா ஆலம், ஏப் 25- கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற பயணிகள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமின்றி வரும் ஏப்ரல் முதல் தேதி தொடங்கி தரை மார்க்கமாக சிங்கப்பூர்-மலேசிய எல்லையை கடக்கலாம்.

புறப்படும் இடத்திலும் சென்று சேரும் இடத்திலும் கோவிட்-19 சோதனைக்கு அவர்கள் உட்பட வேண்டியதில்லை என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
தரை மார்க்கமாக பயணம் மேற்கொள்ளும் அனைத்துப் பயணிகளுக்கும் இந்த நிபந்தனை பொருந்தும் என்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் தெரிவித்தார்.

மலேசியா- சிங்கப்பூர் எல்லையை தரை மார்க்கமாக கடக்க விரும்புவோர் பயணத்திற்கு இரு தினங்கள் முன்னதாக கோவிட்-19 பரிசோதனையை மேற்கொண்டால் போதுமானது. அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றார் அவர்.

இதனிடையே, மலேசியா-தாய்லாந்து எல்லை குறித்து கருத்துரைத்த அமைச்சர், புக்கிட் காயு ஹீத்தாம்-சடாவோ மற்றும் வாங் க்ளியான்-வாங் ப்ராச்சான் ஆகிய இரு எல்லைக் பகுதிகள் மட்டுமே திறக்கப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சொன்னார்.

தங்கள் நாட்டிற்கு சுற்றுப்பயணிகள் மட்டுமே வருவதற்கு தாய்லாந்து அனுமதி வழங்கியுள்ளது. அந்நாட்டிற்கு தினசரி அல்லது அடிக்கடி பயணம் மேற்கொள்வோர் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றார் அவர்.


Pengarang :