இவ்வாண்டில் மேலும் மூன்று மறுசுழற்சி மையங்கள் திறக்கப்படும்

ஷா ஆலம், ஜூன் 18- இவ்வாண்டு இறுதிக்குள் மேலும் மூன்று மறுசுழற்றி மையங்களை கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் அமைக்கவுள்ளது.

சிப்பாங், அம்பாங் மற்றும் உலு சிலாங்கூரில் இந்த மறுசுழற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.

இது வரை சிப்பாங்கில் இத்திட்டத்தை மேற்கொள்வதற்கு முழு அனுமதி கிடைத்துள்ள வேளையில் அம்பாங் மற்றும் உலு சிலாங்கூரில் இதன் தொடர்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

இதன் வழி தற்போது கிள்ளான், மேரு மற்றும் சுபாங் ஜெயா, புக்கிட் பூச்சோங்கில் செயல்பட்டு வரும் இரு மறுசுழற்சி மையங்களுடன் சேர்த்து இத்தகைய மையங்களின் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்தவிருக்கிறோம் என்றார் அவர்.

இத்திட்டத்தின் வாயிலாக மறுசுழற்சியின் முக்கியத்துவதை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த முடியும் என நம்புகிறோம். மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்தும் பணியை பல்வேறு தரப்பினருடன் இணைந்து ஆண்டு முழுவதும் மேற்கொள்ளவிருக்கிறோம் என்றார் அவர்.

பொது மக்களின் வசதிக்காக ஒவ்வொரு ஊராட்சி மன்றங்களிலும் இதுபோன்ற மறுசுழற்சி மையங்களை அமைக்க தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :