ANTARABANGSAHEALTH

சிறார்களை  உள்ளடக்கிய முதல் கோவிட்-19 மரணச் சம்பவம் சிங்கையில் பதிவு

சிங்கப்பூர், ஜூன் 28 – கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஒன்றரை வயது சிங்கப்பூர் சிறுவன் நேற்று காலமானதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கோவிட் -19 சுவாச ஒத்திசைவு வைரஸ் மற்றும் என்டோவைரஸ் தொற்றுகளால் ஏற்பட்ட மூளைக்காய்ச்சலே அச்சிறுவனின் மரணத்திற்கு காரணமாகும்.

பன்னிரண்டு வயதுக்குட்பட்ட  நோயாளி கோவிட் 19 நோய்த் தொற்று காரணமாக மரணமடைவது சிங்கப்பூரில்  இதுவே முதல் முதன் முறையாகும்  என்று அமைச்சு அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நோயாளிக்கு வேறு எந்த மருத்துவ பிரச்னையும் இல்லை என்றும் அவர் முன்பு நல்ல உடல் நலத்துடன் இருந்ததாகவும் அமைச்சு கூறியது.

கடுமையான காய்ச்சல் மற்றும் வலிப்பு காரணமாக அச்சிறுவன் இம்மாதம் 21 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 22 ஆம் தேதி மூளைக்காய்ச்சல் கண்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

கடந்த திங்கள்கிழமை நண்பகல் 12.00 மணி நிலவரப்படி அக்குடியரசில் 5,309 புதிய கோவிட்-19 சம்பவங்களும் ஒரு இறப்பும் பதிவாகியுள்ளது

 


Pengarang :