Pesawah menanam padi di Sungai Leman, Sekinchan. Foto ARKIB SELANGORKINI

அதிக விளைச்சல் தரக்கூடிய புதிய வகை அரிசி- மார்டி அறிமுகம்

சுங்கை பெசார், ஜூலை 16 – மலேசிய விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் (மார்டி) மார்டிரைஸ் அரோமா (மரியா) என்ற புதிய வகை சிறப்பு அரிசியை உருவாக்கியுள்ளதுஇது முந்தைய ரகங்களை விட வேகமாக முதிர்ச்சியடையக்கூடியதாகவும் அதிக மகசூல் தருவதாகவும் உள்ளது.

எம்.ஆர்.கியு. 103 என்றும் அழைக்கப்படும் இந்த கலப்பின வகை அரிசி  எம்.ஆர்.கியு.89 மற்றும்  எம்.ஆர்.கியு. 50 க்கு இடையிலான சேர்ர்க்கையில் உருவானதாகும் என்று விவசாயம் மற்றும் உணவுத் தொழில்துறை அமைச்சர்,டத்தோஸ்ரீ டாக்டர் ரொனால்ட் கியாண்டே கூறினார்.

கிட்டத்தட்ட 10 லட்சம் வெள்ளி முதலீட்டில் இந்த அரிசியை உருவாக்க 13 ஆண்டுகள் தேவைப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

105 செண்டி மீட்டர் உயரம் வரை வளரும் மரியா வகை நெல்லை  117  முதல் 120 நாட்களில் அறுவடை செய்யலாம். ஒரு ஹெக்டருக்கு ஐந்து மெட்ரிக் டன்களுக்கு மேல் மகசூல் கிடைக்கும். பழைய ரக நெல் முதிர்ச்சியடைவதற்கு 120 நாட்களுக்கு மேல் தேவைப்படும் என்பதோடு சுமார் 119 செண்டி மீட்டர் வரை வளர்ந்து குறைவான விளைச்சலையே தரும் என்றார் அவர்.

நேற்று இங்குள்ள பிளாட் பெத்தானி பாரிட் 1, தீமோரில் நடைபெற்ற மரியா வகை நெல்லின் அறிமுக விழாவுக்குப் பின்னர்  செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நீண்ட, மெல்லிய, நறுமணம் கொண்ட மற்றும் நடுத்தர அமிலோஸ் அரிசியாக மரியா விளங்குகிறது. இது  குறைந்த பிசுபிசுப்புத் தன்மை கொணடுள்ளதோடு  நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது என்று கியாண்டி கூறினார்.

 நறுமண அரிசிக்கான அதிக தேவை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு  40 சாதாரண வகை  அரிசி,  12 சிறப்பு வகை அரிசி மற்றும் ஒரு கலப்பின வகை அரிசியை உள்ளடக்கிய 53 வகையான அரிசிகளை மார்டி உருவாக்கியுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

மலேசியாவில் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள வாழ்க்கை முறை மற்றும் சமூகப் பொருளாதார நிலை மாற்றம், உயர்தர மற்றும் ஆரோக்கியமான நறுமண அரிசிக்கான தேவையை அதிகரிக்கச் செய்துள்ளது என்றார் அவர்.


Pengarang :