பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்க 10 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு-மந்திரி புசார்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 24- சிலாங்கூர் மக்கள்  இலவச சட்ட ஆலோசனை பெறுவதற்கு ஏதுவாக சிலாங்கூர் சட்ட ஆலோசனை  நிதியை மாநில அரசு உருவாக்கியுள்ளது.

மலேசிய வழக்கறிஞர் மன்றம் மற்றும் சிலாங்கூர் வழக்கறிஞர் மன்றத்தின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த நிதிக்கு 10 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நகர்ப்புற ஏழைகளில் பலர் சட்ட வரம்பிற்கு அப்பாற்பட்ட பிரச்னைகளில் சிக்கிக் கொள்கின்றனர். அத்தகையோர் இந்த நிதியின் வாயிலாக சிலாங்கூர் வழக்கறிஞர் மன்றத்திடம் இலவசமாக ஆலோசனை பெறலாம் என்று அவர் தெரிவித்தார்.

மாநில அளவிலும் கூட்டரசு நிலையிலும் சட்டப் பிரச்னையை எதிர்நோக்குவோர் உரிய நியாயம் பெற இலவச ஆலோசனைக்கு இந்த மன்றத்திடம் விண்ணப்பிக்கலாம் என்றார் அவர்.

இன்று இங்கு நடைபெற்ற ஜெலாஜா இல்திஸாம் பென்யாயாங் சிலாங்கூர் திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த இலவச சட்ட ஆலோசனை நிதி, வீ.கணபதிராவ் வசமுள்ள சமூகநல ஆட்சிக்குழுவின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இதன் தொடர்பான முழு விபரங்கள் வரும் ஆகஸ்டு மாத மத்தியில் வெளியிடப்படும் என்றார்

Pengarang :