ECONOMYPENDIDIKAN

மெட்ரிகுலேசனில் இந்திய மாணவர்கள் இட விவகாரத்தை விட, ம.இ.கா அதன் பொய் புரட்டுகளை தற்காக்கக் கடுமையாகப் பாடுபடுகிறது என்கிறார்  ஜஸ்டின் ராஜ்

சுபாங் ஜெயா, ஆகஸட் 18;- இவ்வாண்டு மெட்ரிக்குலேசன்  இட விவகாரத்தில், அதிக எண்ணிக்கையிலான இடங்கள் இந்திய மாணவர்கள் பெற வேண்டும் என்பதில் எல்லா இந்தியர்களுக்கும் அக்கறை உண்டு. இப்பொழுது  அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள ம.இ.கா அதன் வேலையைச்  சரியாகச் செய்ய வேண்டும் எனப் பக்காத்தான் ஹராப்பான் பங்காளி கட்சிகள் அமைதி காத்தன என்கிறார் சுபாங் ஜெயா மாநகர் மன்ற உறுப்பினரும் முன்னாள் கோத்தா ராஜா இளைஞர் பகுதி தலைவருமான ஜஸ்டின் ராஜ்.

ம.இ.கா ஒரு அரசாங்கத்தின் பொறுப்பான பங்காளியாக, மெட்ரிக்குலேசன் இட ஒதுக்கீட்டில் விடுபட்ட திறமையான 200 இந்திய மாணவர்களுக்கு சத்தமில்லாமல் .இடம் பெற்றுத் தந்திருக்க வேண்டும்.  ம.இ.கா அதன்  திறமையை, தலைமைத்துவ ஆற்றலை நிரூபிக்கக் கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தை ம.இ.கா நழுவ விட்டு இருக்கக் கூடாது.

ஏற்கனவே ம.இ.கா 2000 மேற்பட்ட இடங்களை 2017 ம் ஆண்டே அன்றைய கல்வி அமைச்சரின் அங்கீகாரத்துடன் இந்தியர்களுக்குப் பெற்று விட்டதாக கூறி வந்தது, அதை  நிரூபிக்க கிடைத்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தி இருக்க  வேண்டும்.  ஆனால் ம.இ.கா தலைவர்கள் செய்ய வேண்டியதை விட்டு, பக்காத்தான் ஹராப்பான் நோக்கிக் கூச்சல் போட்டு தனது கையால் ஆகாத தனத்தைக் கடை விரித்துள்ளனர்..

சமுதாயத்தின் தேவையைக் குறிக்கோள்களை அடைவதில் நாம் ஒன்றுபட வேண்டும் என்பதே எங்கள் அவா. அதனால் ம.இ.கா அதன் கடமையை செய்ய வழங்கிய சந்தர்ப்பத்தை அவர்கள் தவற விட்டு, அவர்களின் இயலாமையையும் ஏற்கனவே கூறிய பொய்களைத் தற்காக்கக் கடுமையாகப் பாடுபடுகின்றனர்.

ஏற்கனவே ம.இ.கா கூறிவந்த 2000 மேற்பட்ட இடங்களை 2017 ம் ஆண்டே அன்றைய கல்வி அமைச்சரின் அங்கீகாரத்துடன்  இந்தியர்களுக்குப் பெற்றுவிட்டதாக  கூறிவந்ததை நிரூபிக்க விடுபட்ட 200 மாணவர்களுக்கு இடம் பெற்றுத் தந்திருக்க வேண்டும் ம.இ.கா தலைவர்கள்.

கோழிகூட முட்டை விட்ட சாதனைக்கு பின் கொக்கரிக்கும், ஆனால் ஒன்றுமே சாதிக்காமல் கொக்கரிப்பதில், தாங்கள் வல்லவர்கள் என்பதை மெட்ரிகுலேசன் விவகாரத்தின் வழி மீண்டும் இந்தியர்களுக்கு உணர்த்திவிட்டார் ம.இ.கா தலைவர்கள்  என கூறினார் சுபாங் ஜெயா மாநகர்மன்ற உறுப்பினருமான ஜஸ்டின் ராஜ்.


Pengarang :