சுங்கை லங்காட் வெள்ளத் தணிப்புத் திட்டம் விரைவில் தொடங்கும்

ஷா ஆலம், அக் 5- பன்னிரண்டாவது மலேசியத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட சுங்கை லங்காட் வெள்ளத் தணிப்புத் திட்டம் வெகு விரைவில் தொடங்கப்படும்.

இத்திட்டம் உலு லங்காட், சுங்கை லுய் முகத்துவாரம் தொடங்கி டேசா நண்டிங் வரை மேற்கொள்ளப்படும் என்று டுசுன் துவா சட்டமன்ற உறுப்பினர் எர்டி பைசால் எடி யூசுப் கூறினார்.

அண்மையில் நடைபெற்ற உலு லங்காட் மாவட்ட மேம்பாட்டு நடவடிக்கை மன்றக் கூட்டத்தின் போது, 12வது மலேசியத் திட்டதில் அங்கீகரிக்கப்பட்ட சுங்கை லங்காட் வெள்ளத் தணிப்புத் திட்டத்திற்கான நிதி அங்கீகரிக்கப்பட்டு விட்டதாகவும் விரைவில் பணிகள் தொடங்கும் என்றும் மாநில வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை விளக்கமளித்ததாக அவர் தெரிவித்தார்.

நீர் சேகரிப்பு குளங்களை நிர்மாணிப்பது, ஆற்றை அகலப்படுத்தி ஆழப்படுத்துவது, தடுப்பணை அமைப்பது, பம்ப் ஹவுஸ் கட்டுவது, ஆற்றின் கரைகளை வலுப்படுத்துவது ஆகிய பணிகளை இந்த திட்டம் உள்ளடக்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

சுமார் 43 ஹெக்டர் நிரப்பரப்பில் அமைக்கப்படும் நீர் சேகரிப்பு குளம் நண்டிங் தொடங்கி சிப்பாங் வரையிலான பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படுவதைத் தடுக்கும் எனவும் அவர் சொன்னார்.

கடந்தாண்டி டிசம்பர் மாதம் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் ஷா ஆலம் மட்டுமின்றி உலு லங்காட் மாவட்டமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

 


Pengarang :