MEDIA STATEMENTNATIONAL

சர்ச்சைக்குரிய உரை- டோமி தோமஸ், ஜெயக்குமார் விசாரணைக்கு அழைப்பு

கோலாலம்பூர், அக் 19-  தலைநகரில் கடந்த மாதம் நடைபெற்ற ஆய்வரங்கில்  இன விவகாரங்களை  தொட்டுப் பேசியதாக கூறப்படுவது தொடர்பில் முன்னாள் சட்டத் துறைத் தலைவர் டான்ஸ்ரீ டோமி தாமஸ் மற்றும் மலேசிய சோசியலிச கட்சியின்  (பி.எஸ்.எம்.) தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ் ஆகியோரை அரச 
மலேசிய போலீஸ் படை விசாரணைக்கு அழைக்கவிருக்கிறது.

வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதற்காக அவர்கள் இருவரும்   விரைவில்  அழைக்கப் படுவர் என்று அரச மலேசிய போலீஸ் படையின் செயலாளர் டத்தோ நூர்சியா சாதுதீன் கூறினார்.

தண்டனை சட்டத்தின் பிரிவு 505 (சி) மற்றும்  1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின்  233 ஆம் பிரிவின் கீழ் இச்சம்பவம் மீது   புக்கிட் அமான் வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் குற்றவியல் விசாரணைப் 
பிரிவு ஆகியவை  விசாரணை நடத்தி வருவதாக அவர் நேற்றிரவு வெளியிட்ட ஓர் 
அறிக்கையில் தெரிவித்தார்.

கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன வர்த்தகச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த "15வது பொதுத் தேர்தலை நோக்கி இருண்ட சக்திகள்" என்ற தலைப்பில் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற ஆய்வரங்கில் டோமி மற்றும் டாக்டர் ஜெயக்குமார் அவர்கள் 
ஆற்றிய உரைகள் குறித்து காவல்துறைக்கு புகார் கிடைத்தது . அவ்விருவரும் அந்த நிகழ்வின் நெறியாளர்களாக இருந்தனர்

Pengarang :