நாளை முதல் வியாழன் வரை கடல் பெருக்கு- கிள்ளானில் வெள்ளம் ஏற்படும் அபாயம்

ஷா ஆலம், அக் 24- நாளை முதல் வியாழக்கிழமை வரை கடல் பெருக்கு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளதால் கிள்ளான் வட்டாரத்தில் வெள்ளம் மற்றும் தடுப்பணைகள் உடையும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

வரும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அதிகாலை 5.00 மணி முதல் காலை 8.00 மணி வரை 5.5 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும் என்று கிள்ளான் மாவட்ட பேரிடர் மேலாண்மை செயல்குழு தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது. 

ஆகவே, கிள்ளான் வட்டார மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும் அதே வேளையில் அதிகாரிகள் வெளியிடும் வழிகாட்டல்களுக்கு ஏற்ப நடந்து கொள்ளும்படியும்  கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

வானிலை தொடர்பில் வெளியிடப்படும் அறிவிப்புகளையும் அரசு துறைகள் வெளியிடும் உத்தரவுகளையும் ஏற்று செயல்படும்படியும் பொதுமக்களுக்கு அந்த செயல்குழு ஆலோசனை கூறியது.

இந்த கடல் பெருக்கு அபாயத்தைக் கருத்தில் கொண்டு இம்மாதம் 25 முதல் 28 ஆம் தேதி வரை கிள்ளான் மாவட்ட நிலையில் பேரிடர் நடவடிக்கை அறையும் திறக்கப்படவுள்ளது.


Pengarang :