ANTARABANGSAMEDIA STATEMENTNATIONAL

சுபாங் ஜெயா மாநகர் மன்ற ஏற்பாட்டில் நவீன விளையாட்டுத் தொகுதி நிர்மாணிப்பு

சுபாங் ஜெயா, நவ 3- சுபாங் ஜெயா மாநகர் மன்றம் 1 கோடியே 62 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி செலவில் அதிநவீன விளையாட்டு தொகுதியை தாமான் வாவாசான் பண்டார் பாரு பூச்சோங்கில் நிர்மாணிக்கிறது.

அனைத்துலக தரத்திலான புட்சால் திடலுடன் கூடிய இந்த விளையாட்டுத் தொகுதி 4.31 ஏக்கர் பரப்பளவில் நிர்மாணிக்கப்படுவதாக டத்தோ பண்டார் டத்தோ ஜோஹாரி அனுவார் கூறினார்.

இந்த அதிநவீன விளையாட்டுத் தொகுதி ஃபீபாவினால் அங்கீகரிக்கப்பட்ட பரப்பளவில் புட்சால் திடல் உள்ளிட்ட வசதிகளையும் 1,018 பேர் அமரும் அளவுக்கு இருக்கைகளையும் கொண்டிருக்கும். இந்த விளையாட்டுத் தொகுதி வரும் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பூர்த்தியாகும் என்று அவர் சொன்னார்.

அனைத்துலகத் தரத்திலான புட்சால் அரங்கை நிர்மாணிக்கும் ஒரே ஊராட்சி மன்றமாக சுபாங் ஜெயா மாநகர் மன்றம் விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் விளையாட்டுத் தொகுதியின் கட்டுமானப் பணிகளை இன்று தொடக்கி வைத்தார்.


Pengarang :