சுங்கை காப்பாரில் வெ.80 லட்சம் செலவில் வெள்ளத் தடுப்புத் திட்டம்- இஷாம் ஹஷிம் அறிவிப்பு

ஷா ஆலம், நவ 5- கிள்ளான், சுங்கை காப்பார் கிச்சில் ஆற்றில் வெள்ளத் தடுப்புத் திட்டத்தை  சிலாங்கூர் மாநில அரசு கிள்ளான் நகராண்மைக் கழகத்துடன் இணைந்து வெகு விரைவில் ஆரம்பிக்கவுள்ளது.

அப்பகுதியிலுள்ள கால்வாய்கள் மற்றும் வடிகாலைகளை தரம் உயர்த்தும் பணியை மேற்கொள்வதன் மூலம் சுற்றுவட்டாரத்தில் நிலவும் வெள்ளப் பிரச்சனைக்கு தீர்வு காணவும் வட்டார மக்களின் சௌகர்யமான வாழ்க்கையை உறுதி செய்யவும் இயலும் என்று அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

அந்த பகுதியில் முழு அளவிலான வெள்ளத் தடுப்புத் திட்டத்தை மேற்கொள்ள 80 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் 60 லட்சம் வெள்ளியை கிள்ளான் நகராண்மைக் கழகம் செலவிடும். எஞ்சியத் தொகையை மாநில அரசு வழங்கும் என அவர் குறிப்பிட்டார்.

அந்த திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் ஓராண்டிற்கும் குறைவான காலத்தில் பணிகள் பூர்த்தியாகும் என்றும் அவர் சிலாங்கூர் கினியிடம் தெரிவித்தார்.

முன்னதாக அவர், காப்பார் நகருக்கு பணி நிமித்த வருகை மேற்கொண்டு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள சுங்கை காப்பார் கிச்சில் பகுதியை பார்வையிட்டார்.


Pengarang :