NATIONAL

பிரதமர் சம்பளம் வேண்டாம் என்ற முடிவில் உறுதி- டத்தோஶ்ரீ அன்வார் இப்ராயிம்

ஷா ஆலம், நவ 25; 15 ஆவது பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்தவாறு டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமருக்கான சம்பளத்தை வாங்க மாட்டேன் என்ற வாக்குறுதியில் உறுதியாக இருக்கிறார்.

அரசாங்கம், அமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையே மீட்டெடுக்கும் முயற்சியாக இந்த முடிவு என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கட்சி, மத வேறுபாடின்றி தலைவர்கள் சம்பளம், வட்டி, ஒப்பந்தம், பங்குகள் பற்றி மட்டுமே சிந்தித்து மக்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர் எனும் மக்களின் எண்ணத்தை மாற்றும் முதல் படியாக தான் இவ்வாறு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பிரதமராக பதவியேற்ற பிறகு தனது முதல் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இன்று காலை மணி 10க்கு முன்னதாக புத்ராஜெயாவில் உள்ள தனது அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக பணியை தொடங்கினார் என்று தெரிவித்தார்.

15 ஆது பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இடங்கள் கிடைக்காத்தால், நாடாளுமன்றம் அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிட்டது. பிறகு யாங் டி-பெர்துவன் அகோங் தலையீட்டினால் 10வது பிரதமராக டத்தோஶ்ரீ அன்வார் இப்ராயிம் பதவியேற்றார்.


Pengarang :