ECONOMYSELANGOR

மூத்த குடிமக்கள் நட்புறவுத் திட்டம் மறுசீரமைப்பு

ஷா ஆலம், நவ 25- மூத்த குடிமக்கள் நட்புறவுத் திட்டம் (எஸ்.எம்.யு.இ.) மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ கூடிய பொருள் பொதிந்த திட்டங்களில் ஒன்றாக  விளங்கி வருகிறது.

இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ள 432,051 பேர் இதன் வழி கிடைக்கக்கூடிய பல்வேறு அனுகூலங்களை பெற்று வருகின்றனர்.

இந்த எஸ்.எம்.யு.இ. திட்டம் வரும் 2023ஆம் ஆண்டில் மறுசீரமைப்பு செய்யப் படவுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். இத்திட்டம் ஸ்கிம் மெஸ்ரா இன்சான் இஸ்திமேவா (எஸ்.எம்.ஐ.எஸ்.) என மறுபெயரிடப்படும்.

இந்த புதிய திட்டம் வயது மற்றும் வருமான வேறுபாடின்றி மாற்றுத் திறனாளிகளை இலக்காக கொண்டிருக்கும். எஸ்.எம்.யு.இ. மற்றும் எஸ்.எம்.ஐ.எஸ். திட்ட பங்கேற்பாளர்களும் பொருள்கள் வாங்குவதற்கான 100 வெள்ளி பற்றுச் சீட்டு மற்றும் 500 வெள்ளி மரண சகாய நிதி ஆகிய இரு வித அனுகூலங்களைப் பெறுவர்.

இந்த எஸ்.எம்.ஐ.எஸ். திட்டம் அமலாக்கம் காணும் போது பொருள்கள் வாங்குவதற்கான பற்றுச் சீட்டின் மதிப்பு 100 வெள்ளியிலிருந்து 150 வெள்ளியாக உயர்த்தப்படும். இதன் காரணமாக இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடும் 1 கோடி வெள்ளியாக உயர்வு காணும்.

எஸ்.எம்.யு.இ. மற்றும் எஸ்.எம்.ஐ.எஸ். திட்டங்களின் அமலாக்கத்திற்காக அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டத்தில் 3 கோடியே 5 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.


Pengarang :