ECONOMYSELANGOR

மாநில அரசின் இன்சான் பொது காப்புறுதி திட்டம்

ஷா ஆலம், நவ 26- கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக பொருளாதார ரீதியிலும் சமூகவியல் ரீதியிலும் பெரும் தாக்கத்தை எதிர்நோக்கியுள்ள மக்கள் மீது மாநில அரசு தொடர்ந்து பரிவு காட்டி வருகிறது. இந்த பெருந்தொற்று காரணமாகப் பலர் வேலை இழந்ததோடு வருமானம் பெறுவதற்கு இரண்டு வேலைகளைச் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இத்தகையத் தரப்பினருக்கு காப்புறுதி பாதுகாப்பை அளிப்பதற்காக மாநில அரச இன்சான் எனப்படும் சிலாங்கூர் பொது காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

விபத்தின் காரணமாக உயிரிழப்பு மற்றும் நிரந்தர முடத்தன்மைக்கு ஆளாகும் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் இந்த திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பிறந்து 30 நாள் முதல் 80 வயது வரையிலானவர்கள் பயன்பெற முடியும். இத்திட்டத்திற்கு உண்டாகும் செலவை மாநில அரசு முழுமையாக ஏற்றுக் கொள்ளும்.

மொத்தம் 60 லட்சம் சிலாங்கூர் மக்களை இலக்காகக் கொண்டுள்ள இந்த காப்புறுதி திட்டத்திற்கு இதுவரை 35 லட்சத்து 61 ஆயிரத்து 440 பேர் பதிவு செய்துள்ளனர்.


Pengarang :