ECONOMY

மாற்றுத் திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்

ஷா ஆலம், நவ 26- மாற்றுத் திறனாளிகளுக்கு நட்புறவான மாநிலமாக
சிலாங்கூர் தொடந்து விளங்குவதை உறுதி செய்ய அத்தரப்பினர் நலனில்
மாநில அரசு தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறது.
மாற்றுத் திறனாளிகள் கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை
முழுமையாகப் பெறுவதற்கு ஏதுவாக ஆண்டு தோறும் கணிசமான நிதி
வழங்கப்பட்டு வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
கூறினார்.

இந்நோக்கத்தின் அடிப்படையில் வரும் 2023ஆம் ஆண்டில் மாற்றுத்
திறனாளிகளுக்கான வசதிகளை மேலும் அதிகரிக்கும்படி ஊராட்சி
மன்றங்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக அவர் சொன்னார்.
ஊராட்சி மன்றங்கள் தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு
மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
அத்தரப்பினர் எளிதான முறையில் சேவையை பெறுவதற்கு ஏதுவாக
ஊராட்சி மன்றக் கட்டிடங்களில் இத்தகை வசதிகளை ஏற்படுத்தலாம்
என்றார் அவர்.


Pengarang :