ECONOMYSELANGOR

அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒற்றுமைத் தூதர்கள் நியமனம்

ஷா ஆலம், நவ 26- மாநிலத்தின் அனைத்து தொகுதிகளில் ஒற்றுமைத்
தூதர்களை (டி.பி.எஸ்.) மாநில அரசு நியமிக்கவுள்ளது. இந்த முன்னோடித்
திட்டத்தை அமல்படுத்தும் நாட்டின் முதல் மாநிலமாக சிலாங்கூர்
விளங்குகிறது.

பல்லின மக்களைக் கொண்ட இந்த ஒற்றுமைத் தூதர்கள் மாநிலத்தின்
ஒருமைப்பாட்டு கொள்கையை முன்னெடுக்கும் பொறுப்பை வகிக்கும்
அதே வேளையில் சமூகத்தில் ஒற்றுமைக்கான மத்தியஸ்தர்களாகவும்
செயல்படுவர் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் நியமனம் செய்யப்படும் இந்த
தூதர்கள் ஒற்றுமைக்கான இலக்குகள் விரிவான அளவிலும் சமூகத்தின்
அடிமட்டம் வரையிலும் செல்வதை உறுதி செய்வர் என்று மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இந்த டி.பி.எஸ். திட்ட அமலாக்கத்திற்கு மாநில அரசு பிரத்தியேகமாக
300,000 வெள்ளியை ஒதுக்கியுள்ளதாக மாநில சட்டமன்றத்தில் இன்று
2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த போது
சொன்னார்.


Pengarang :