Dato’ Menteri Besar, Dato’ Seri Amirudin Saari, bercakap kepada media ketika lawatan persiapan sambutan Deepavali di Little India, Klang pada 2 November 2021. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
ECONOMY

செமந்தா  தொகுதி எதிர்க்கட்சி பிரதிநிதி  2023 ஆம் வரவு செலவுத் திட்டத்தில் திருப்தி

ஷா ஆலம், நவ 27; டத்தோ மந்திரி புசார்  நேற்று முன்வைத்த சிலாங்கூர் பட்ஜெட் 2023, மக்களின் தலைவிதியைத் தொடர்ந்து பாதுகாப்பதாக எதிர்க்கட்சி பிரதிநிதிகள் விவரித்தனர்.

பெண்கள், குழந்தைகள், கல்வி, மற்றும் வெள்ளத்திற்குப் பின் என அனைத்து  அம்சங்களிலும் மக்களுக்கு உதவும் ஒரே மாநிலம் சிலாங்கூர்  உள்ளது என்று செமந்தா  தொகுதி  சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி கூறினார்.

சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட் அனைத்து அம்சங்களையும் மற்றும் அனைத்து தரப்பு  மக்களையும் உள்ளடக்கியதால் நான்  திருப்தி அடைகிறேன். சிலாங்கூர் அரசாங்கம் தனது மக்களுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்குவது ஒரு பாரம்பரியமாக உள்ளது. இருப்பினும் அவசரமாக செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன; குறிப்பாக சுங்கை செர்டாங் அனையை வலுப்படுத்துதல் போன்றவை, காரணம் அலை அதிகமாக இருக்கும் போது எப்போது உடைந்துவிடும் என ஊகிக்க முடியாமல் இருக்கிறது.

மேலும், அதை இன்னும் உறுதியாக மற்றும் சரிசெய்ய ஒரு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேம்பாட்டு பணிகளை உடனடியாக செய்ய வேண்டும், தேவைப்பட்டால் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து, பட்ஜெட்டில் உள்ள RM100 முதல் RM200 வரை ஜோம் ஷாப்பிங் மானியம் மற்றும் பாரம்பரிய கிராமத் தலைவர்கள், இந்திய சமூகத் தலைவர்களுக்கான கொடுப்பனவுகள் கூடுதல் அம்சங்களாகும் என்று விளக்கினார். சமூகத் தலைவர்கள் கொடுப்பனவை சேர்ப்பது மக்களுக்கான சேவைகளை மேம்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.

கூடுதலாக, சபாக் பெர்னாம் பகுதியை மேம்படுத்தம் அறிவிப்பு அவ்விடத்தின் வெற்றிக்கு வழிவகுக்கிறது. ஏனெனில் நல்ல உள்கட்டமைப்பு உள்ளூர் பொருளாதார மேம்பாட்டுக்கு   கூடுதல்  முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் உள்ள அனைத்து அம்சங்களையும் முழுப் பொறுப்புடனும், ஒத்துழைப்புடனும் ஒற்றுமை அரசாங்கத்தின் மூலம் நிறைவேற்ற முடியும் என்று அவர் நம்புகிறார். டத்தோஶ்ரீ தாக்கல் செய்த 2023ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த போது, அடுத்த ஆண்டு பொருளாதார மந்தநிலைக்கு தயாராகுவதற்குச் சிலாங்கூர் அரசாங்கம் RM2.45 பில்லியனை ஒதுக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.


Pengarang :