ECONOMY

முந்தைய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும்  அன்வார் செயல்படுத்த வேண்டும் என்று கியூ பாக்ஸ் விரும்புகிறது

கோலாலம்பூர், நவ. 26 – அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும்  பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான புதிய அரசாங்கம் செயல் படுத்த வேண்டும் என்று பொது மற்றும் சிவில் சேவை ஊழியர்கள் தொழிற்சங்கமான (கியூ பாக்ஸ்)  கேட்டுக் கொள்கிறது. .

முன்னாள் பிரதம மந்திரி டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் ஆகஸ்ட் 30 அன்று அறிவித்த முயற்சிகளும் மற்றும் நவம்பர் 7ஆம் தேதி பட்ஜெட் 2023 தாக்கல் செய்த அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதிகள் அவை என்று அதன் தலைவர் டத்தோ அட்னான் மாட் கூறினார்.

“அரசாங்கம் மாறியதற்காக அதை திரும்பப் பெறுவது ஏற்புடையதல்ல. முன்னதாக அறிவிக்கப்பட்ட தேதியின்படி செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

“2018 ஆம் ஆண்டில் 14வது பொதுத் தேர்தலில் (GE14) ஆட்சி மாற்றம் ஏற்படும் போது அரசாங்கம் வாக்குறுதியளித்த முன்முயற்சிகள் நிறைவேற்றப்படாத நிலையில் தற்போது அதேபோல் நடப்பதை காண  கியூபாக்ஸ்  விரும்பவில்லை” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்

முந்தைய அரசாங்கத்தால் அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட முன் முயற்சிகளில், அடுத்த ஜனவரி முதல் ஆண்டு சம்பள RM100 கூடுதலாக வழங்கப்படும், 2023 ஜனவரியில் RM700 சிறப்பு நிதி உதவி, ஓய்வு பெற்றவர்களுக்கு RM350 நிதி உதவி மற்றும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கான RM600 சிறப்பு நோன்பு பெருநாள் உதவி ஆகியவை அடங்கும்.

2018 ஆம் ஆண்டில் அரசு ஊழியர்கள் ஏமாற்றம் குறித்து, அட்னான் கூறுகையில், இது நடந்திருக்க கூடாது, ஏனெனில் ஒரு முதலாளியாக, நாட்டின் நிர்வாகம் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். அரசு ஊழியர்கள் செய்த அனைத்து தியாகங்களுக்கு பிறகும் அரசாங்கம் தனது  வாக்குறுதிகளை திரும்பப் பெறக் கூடாது.

2018 இல் பொதுத் தேர்தல் 14 க்கு முன், பாரிசான் நேஷனல் (BN) அரசாங்கம் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஒரு வருட ஆண்டு சம்பள உயர்வு அறிவித்தது. இரண்டாவது முறை அடிப்படையில் பதவி உயர்வு 10 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது மற்றும் ஆசிரியர்களுக்கு 56 கிரேடு சேர்க்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு அம்மாற்றத்தைத் தொடர்ந்து செயல்படுத்தப்படவில்லை.

டிசம்பர் 19-ம் தேதி மினி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது, அனைத்து எம்.பி.க்களும் பிரதமருக்கு ஆதரவளிப்பார்கள் என்று கியூ பாக்ஸ் நம்பிக்கை தெரிவித்தது.

வியாழன் (நவம்பர் 24) 15ஆவது பொதுத் தேர்தல் முடிவுகள் தொங்கு பாராளுமன்றம் உருவாக்கிய பின்னர், யாங் டி-பெர்துவான் அகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாசுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா முன்னிலையில் மலேசியாவின் 10 வது பிரதமராக அன்வார் பதவியேற்றார்.


Pengarang :